மேட்டூர் நீர்மட்டம்116.52 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,526 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,075 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம்  கனஅடியும், கிழக்கு  மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் திறக்கப்படுகிறது. வரத்தை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 117.11 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 116.52 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 88.09 டிஎம்சி.

Related Stories: