ஈரான் ராணுவ தளபதி கொலை எதிரொலி அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி : 60 பேர் மீது வழக்கு

சென்னை: ஈரான் ராணுவ தளபதியை அமெரிக்க படை குண்டு வீசி கொலை செய்ததை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 60க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதனால் இணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அமெரிக்க துணை தூதரகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலை மசூதி அருகே பேரணியாக தூதரகம் நோக்கி  செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஈரான் ராணுவ தளபதி சுலைமானி குண்டு வீசி ெகாலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும், போராட்டம் நடத்தியதாக 60க்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: