நேற்று கைதான நெல்லை கண்ணன் பாளையங்கோட்டை சிறையிலிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்

நெல்லை: நெல்லை கண்ணன் பாளையங்கோட்டை சிறையிலிருந்து, இடவசதி உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த முஸ்லிம் அமைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு நெ.கண்ணன் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு செய்ததால், தலைமறைவான நெ.கண்ணனை நேற்று இரவு கைது செய்தனர்.

Related Stories: