புத்தகங்களை பரிசாக தரும் ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை: ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரன் ‘எனக்கு வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் சால்வை மற்றும் பூங்கொத்திற்குப் பதிலாக, புத்தகங்களை தாருங்கள். அதனை நூலகத்திற்கு தருவேன்’ என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதனை ரீ-ட்விட் செய்து கமெண்ட்டாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் டிவிட்டர் பதிவை படித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன்.  நானும், சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து மற்றும் சால்வைக்கு பதில் புத்தகங்களை தாருங்கள் என்று குறிப்பிட்டதன் மூலம், எனக்கு கிடைத்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை, நூலகங்களுக்கு கொடுத்துள்ளேன்.  நம்மை போன்றே நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்கள் இதனை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: