தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கடிதம்

சென்னை,: தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்துப் பகுதி இந்திய மக்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட உள்ள தேசிய குடிமக்கள் ஆவணம் (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) காரணமாக இந்திய குடிமக்களுக்கு ஏற்படக் கூடிய இழப்பு, அதனால் நாடு முழுவதும் ஏற்படவிருக்கிற சமூக பதற்றம் ஆகியவை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர்.

இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்ற வகையில் இப்போது தேசிய மக்கள் பதிவேட்டிற்கான பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பல்வேறு மாநில கட்சிகளும் தங்கள் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் ஆவணத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் பொதுவான மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலைமை உருவாகியுள்ளது. அனைத்து மக்களும் மத்திய அரசின் என்பிஆர், என்ஆர்சி ஆகியவைகளை கைவிட வேண்டுமென பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Related Stories: