உள்ளாட்சி தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க செல்போன் எண் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலையொட்டி, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, தொழிலாளர் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வளர்மதி அறிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும், 30ம் தேதியும் இரு கட்டங்களாக நடக்கிறது. வாக்காளர்கள் அனைவரும் கடமையாற்ற வேண்டி, செலாவணி முறிச்சட்டம் 1881ன் படி, தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இன்றும், 30ம் தேதியும் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீறி நடத்துவோர் குறித்து 99406 45043 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வளர்மதி அறிவித்துள்ளார்.

Related Stories: