இ.கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 95-வது பிறந்தநாள்:தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 95-வது  பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமையியகமான பாலன் இல்லத்தில் ஆர்.நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.   தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஸ்டாலின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் எளிய இனிய துணிச்சல் மிக்க போராளி நல்லகண்ணு 100-ஆண்டு காலம் தாண்டி வாழ்ந்து தங்களுக்கு வழிகாட்டவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் நல்லகண்ணுவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் நல்லகண்ணுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.      

Related Stories: