விலங்குகளின் காட்சிப்படம் நவீன முறையில் அறிமுகம்: சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.20 ஆக உயர்வு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதே போல பெரியவர்களுக்கான கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் சிறுவர்களை கவரும் வகையில் வனவிலங்குகளின்  அனிமேசன் காட்சிகள் கிண்டி பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிண்டி தேசிய பூங்கா:

சென்னை மாநகராட்சியில் கிண்டி தேசிய பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே 8வது சிறிய தேசிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய பூங்கா  உலர்/வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்களைக் கொண்டது. இங்கு பரந்த நிலப்பரப்பில் 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள்  காணப்படுகின்றன. 14 பாலூட்டி சிற்றினங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருக்கின்றன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற  அதிக தொகையில் காணப்படுபவையாகும். மேலும், பல்வேறு வகையான தவளைகள், ஊர்வன சிற்றினனங்களும் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நவீன் முறையில் விலங்குகளின் படம்:

நாட்டிலேயே முதல் முறையாக விலங்குகளின் காட்சிப்படம் நவீன முறையில் அறிமுகமாகிறது. சிறுவர்களை கவரும் வகையில் வனவிலங்குகளின் அனிமேசன்  காட்சிகள் கிண்டி பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புலி, டால்ஃபீன், கங்காரு, அனகோண்டா, டைனோசர் போன்ற விலங்குகளின் காட்சிகளை திரையில்  பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

Related Stories: