முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.முன்னாள்  பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  16-ம் தேதி காலமானார்.

இவரின் நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்ப்பூரின் பெயரை அடல் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்து அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்போவதாகவும் தங்கள் மாநிலத்தில்  அவருக்கு நினைவிடம் அமைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என  அறிவித்திருந்தார். ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலைக்கு சுமார் 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லோக் பவனில்  நிறுவப்பட்டுள்ள 25 அடி வெண்கலச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து, வாஜ்பாயின் பெயரில் அமையவுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories: