குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாக்பூரில் பேரணி: பாஜக, மஞ்ச், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாக்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்ததிருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியுரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்ட்டது. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். தினந்தோறும் வெவ்வேறு  வடிவத்தில் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்திற்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத்தில் கொண்டுவந்த திருத்தங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் எச்.ராஜா முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் சுரேஷ் என்ற சுரேஷ்கர்ணா, ஊடகத்துறை தலைவர் பிரசாத் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் பா.ஜ., லோக் அதிகார் மஞ்ச், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பினரை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நீளமான மூவர்ண கொடியை தாங்கியபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

Related Stories: