திருவண்ணாமலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா மகாதீபம் நேற்று இரவுடன் நிறைவுபெற்றது. இதனையடுத்து 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து இன்று காலை மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத் திருவிழா நேற்று இரவுடன் முடிவடைந்து இன்று காலை மகா தீப கொப்பரை இன்று காலை கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Related Stories: