ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு: கலெக்டர்களுடன் ஆணையர் ஆலோசனை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ேநற்று ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படை இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியில் மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 54 ஆயிரத்து 747 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 ஆயிரத்து 939 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 992 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த வேட்பு மனு மீதான பரிசீலனை 17ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளட்ட வேட்புமனுக்கள் பட்டியல் சம்மந்தபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டன. வேட்பாளர்கள் நாளை இன்று 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். இதனைத் தொடர்ந்து மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதன்பிறகு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கும். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தொடர்பாக மாநில தேர்தல் தேர்தல் ஆணையர் பழனிசாமி 27 மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், தேர்தல் பிரிவின் காவல் துறை தலைவர் சேஷசாய், தேர்தல் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்தல், வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல்,வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: