தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்த மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழு: இணை ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை சென்னை மாநகராட்சி உருவாக்கியது. இதனை தொடர்ந்து  சென்னை மாநகராட்சி புள்ளிவிவரப்படி 39 ஆயிரம் தெருவோர வியாபாரிகள் இருப்பது ெதரியவந்து. ஆனால் அதில் 23 ஆயிரம் பேர் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் தங்களின் கடைகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து துறைகள் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைளியில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை இணை ஆணையர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்டார துணை ஆணையர்கள் தர், ஆல்பி ஜான், ஆகாஷ், முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, பேருந்து சாலைகள் துறை கண்காணிப்பு பொறியாளர், காவல் துறை இணை ஆணையர், புளியந்தோப்பு சரக துணை ஆணையர், மண்டல அலுவலர்கள், செயற் பொறியாளர்கள், நெஞ்சாலைத்துறை அதிகாரகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை, விற்பனை மண்டலங்கள் அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் விற்பனை மண்டலங்களுக்கு வியாபாரிகள் இடமாற்றம் ெசய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் விற்பனை மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்ய மண்டல வட்டார துணை ஆணையர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என்று இணை ஆணையர் லலிதா அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள், விற்பனை மண்டல உறுப்பனர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து வியாபாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: