திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கடை ஞாயிறு விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனி கோயில் கொண்டுள்ள, நாகநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி இவ்விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் வரை உற்சவர் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் இறுதி நாளான இன்று (15ம் தேதி) காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் வீதியுலா புறப்பாடும், மதியம் 2 மணிக்கு, கோயிலின் உள்ளே உள்ள சூரிய புஷ்கரணியில், கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: