தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் கன மழை பெய்து  வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து  வருகிறது. சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டை, சூரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து  வருகிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை மற்றும் குளித்தலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அதிகாலை முதல் மிதமான  மழை பெய்து  வருகிறது. விழுப்புரம், கோயலியனூர், வள்வனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொனனேரியில் மிதமான மழை பெய்தது. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி சாமநத்தம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

Related Stories: