ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைக்க கலெக்டர் ஆய்வு

*கலையரங்கை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான ஆயத்த பணிகளை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார். இதையடுத்து, ஏலகிரி மலையில் உள்ள யாத்ரி நிவாஸ், ஆதிதிராவிடர் நல பள்ளி, மகளிர் விடுதி கட்டிட மையம், பழத்தோட்டம் உள்ளிட்ட இடங்களையும்  ஆய்வு செய்தார். பின்னர், அங்குள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவர்களுக்கு, கலெக்டர் காலணிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, சுற்றுலா தலமான ஏலகிரி மலையை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அரசு யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அருகே  சிதிலமடைந்துள்ள பொழுதுபோக்கு கலை அரங்கத்தை ஆய்வு செய்தார்.

பின்னர், அரங்கை மேம்படுத்த ஜோலார்பேட்டை பிடிஓ பிரேம்குமாருக்கு  கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கலையரங்கம் பகுதியில் சிதிலமடைந்த சேர்களையும், குப்பைகளையும் சுத்தப்படுத்தும் பணியை பார்வையிட்டார். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கி இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் அப்பகுதியில் பல்வேறு இடங்களை  மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அருண், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் உட்பட பலர் உடனிருந்தனர்.முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏலகிரி மலை சுற்றுலத்தளாமாக மேம்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் ₹50 லட்சம் மதிப்பில் ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான ஆயத்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Related Stories: