தமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன். இவருக்கு, ஒரு வாரத்துக்கு முன் மர்ம கடிதம் வந்தது. அதில், பதவியேற்று ஓராண்டாகியும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு  எந்த நல்லதையும் செய்யவில்லை. தோட்ட பணியாளர்கள், காவலர்களை கேவலமாக பேசி, 46 பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள். அவர்களின் குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறது. 2 வாரத்துக்குள் பணியில் அமர்த்தாவிட்டால் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வோம். கொலை செய்வதற்கும் தயங்க மாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் பதிவாளர் (பொ) சின்னப்பன் கடந்த 2ம் தேதி புகார் செய்தார். இதன்பேரில் அலுவலர்கள், ஊழியர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தை எழுதிய ஆசாமிகள் யார் என்றும் விசாரணை நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: