மீஞ்சூர் அரியன்வாயல் பகுதியில் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றவேண்டும்: காவல்நிலையத்தில் மக்கள் மனு

பொன்னேரி: அரியன்வாயல் பகுதியில் வடமாநிலத்தவர்கள் கட்டிய வீடுகளை அகற்றவேண்டும் என்று மக்கள் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அரியன்வாயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொட்டகை அமைத்து வசித்தனர். இந்த பகுதியில் போதிய வசதியில்லாததால் மக்கள், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்திவந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் இவர்கள் வந்தபிறகு மீஞ்சூர் பகுதியில் வழிப்பறி திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால் அந்த இடத்தில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அரியன்வாயல் பகுதி மக்கள் சார்பில், மீஞ்சூர் காவல்நிலையத்தில் மனு கொடுத்தனர். அம்மனுவில், ‘’அரியன்வாயல் பகுதியில் வசித்துவரும் வடமாநிலத்தவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அரியன்வாயல் பகுதியில் போலீசார் ரோந்துவர வேண்டும். அம்மா செட்டிகுளம் அருகில் பேரி கார்டு அமைக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Related Stories: