ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் நகைகள் துணிகர கொள்ளை

ஆவடி: ஆவடி அண்ணனூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டை உடைத்து 20 சவரன் நகைகள் மற்றும் 52 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அண்ணனூர், சிவசக்தி நகர், திருவருட்பா தெருவை சேர்ந்தவர் வரதன் (61). ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர். இவரது மனைவி பத்மினி (56). தம்பதியின் மகள் தாம்பரம் அருகே மாடம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 4ம் தேதி வரதன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மகள் வீட்டுக்கு சென்றார்.  

Advertising
Advertising

நேற்று காலை வரதன் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்போன் மூலம் கொடுத்தனர். இதனால் வரதன் தனது மனைவியுடன் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர், வீட்டில் சோதனை செய்தபோது 20 சவரன் தங்க நகைகள், 52 ஆயிரம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: