கடலூர் துறைமுகம் மார்க்கெட்டில் கிலோ வெங்காயம் 10க்கு விற்பனை: பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர்

கடலூர்: கடலூர் துறைமுகம் மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். அரை மணி நேரத்தில் மூன்று டன் வெங்காயம் விற்று தீர்ந்தது. வெங்காய விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தரத்துக்கு ஏற்ப ரூ.150 முதல் 200 வரை பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விற்பனை ஆகிறது. வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து. எனினும் விலை குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கடலூரில் நேற்று பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறிய அளவிலான வெங்காயம் 4 கிலோ 100 ரூபாய்க்கு ( கிலோ ரூ.25) விற்கப்பட்டது. மேலும் தரத்துக்கு ஏற்ப வெங்காயத்தின் விலை ரூ.60லிருந்து 90 வரை விற்கப்பட்டது. இது காட்டுத்தீபோல் பரவியதால் பொதுமக்கள் கடலூர் மார்க்கெட்டை நோக்கி படையெடுத்தனர். மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. இந்நிலையில் வெங்காயம் பதுக்கல் இருக்கிறதா என்று அதிகாரிகளும் மண்டிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதன் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

கடலூர் உழவர் சந்தையில் நேற்று மிகவும் சிறிய ரக வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் சிறு வியாபாரிகளும் வெங்காயத்தை வாங்கி சென்றனர். அரை மணி நேரத்தில் மூன்று டன் வெங்காயம் விற்று தீர்ந்தது. இதேபோன்று பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 முதல் 90 வரை விற்கப்பட்டது. இதற்கிடையே கடலூர் துறைமுகம் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் அங்கு படையெடுத்தனர். போட்டிக்கொண்டு வெங்காயத்தை வாங்கிச்சென்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறும்போது, வெங்காயம் விலை கட்டுக்கடங்காமல் சென்றதால் தமிழக அரசு எகிப்தில் இருந்தும், பெல்லாரியில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் வெங்காயத்தை கொள்முதல் செய்து வருகிறது. இதன் காரணமாக கடலூருக்கு வந்த சிறியரக வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றனர்.

Related Stories: