பணம் படைத்தவர்களை விட ஏழைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் : ஐகோர்ட் நீதிபதி வினீத் கோத்தாரி பேச்சு

சென்னை: பணம் படைத்தவர்களைவிட ஏழைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று, உலக மனித உரிமைகள் நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி பேசினார். சென்னை, பாரிமுனையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில், உலக மனித உரிமைகள் தின நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு சட்டபணிகள் ஆணைகுழு தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான வினித் கோத்தாரி தலைமை தாங்கினார். அப்போது, மனித கடத்தல் மற்றும் பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார். இதனைதொடர்ந்து நீதிபதி, சட்டபணிகள் ஆணைகுழு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார்.

இதனைதொடர்ந்து பேசிய நீதிபதி வினீத் கோத்தரி,  மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்.  நீதி என்பது விரைவாக கிடைக்க வேண்டும்.பணம் படைத்தவர்களை விட ஏழைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். என்று கூறினார். இந்த நிகழ்வில், சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழு செயலாளர் நீதிபதி ஜெயந்தி மற்றும் மாநில சட்டப்பணிகள் உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: