துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: நேர்முக தேர்வு 23ம் தேதி தொடக்கம்

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் 27, போலீஸ்  டிஎஸ்பி 90, வணிக வரித்துறை உதவி ஆணையர்-18. கூட்டுறவு சங்கம் துணைப்பதிவாளர்-13, மாவட்ட பதிவாளர்-7, ஊரகவளர்ச்சி துறை உதவி இயக்குநர்-15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்-8, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாவட்ட  அலுவலர்-3 இடங்கள் என 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 2,29,438 பேர் பங்கேற்றனர். இதில் 9442 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 12, 13, 14ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முதன்மை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஸ்சி தனது இணையதளம் www.tnpsc.gov.inல் வெளியிட்டது. இவர்களுக்கான மூலச்  சான்றிதழ்  சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு வருகிற 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை (25, 29ம் தேதி நீங்கலாக) நடைபெறுகிறது. வருகிற 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற 3 நிலைகளை கொண்டது.

இதில், முதன்மை தேர்வை 9442 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 363 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில், 117 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள். முதன்மை தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்முக தேர்வு மற்றும் வகுப்புகள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் வருகிற 11ம் தேதி முதல் நடைபெற உள்ளது. குரூப் 1  நேர்முக தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில்  உள்ள அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவே இந்த மாதிரி நேர்முக தேர்வையும் வழிகாட்டு கருத்தரங்கையும் நடத்த உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் 044-43533445, 044-45543082 என்ற எண்களில்  தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே ஆண்டில் ரிசல்ட்

டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பில், இனிவருங்காலதில், தேர்வுக்கான முடிவுகள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும். குருப் 1 பதவிக்கு நிலையான கால  அட்டவணை பின்பற்றப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் (முதல் வாரம்) அறிவிப்பு வெளியிடப்படும், ஏப்ரல் மாதம்-முதனிலை தேர்வு, மே-முதனிலை தேர்வு முடிவு,ஜூலை-முதன்மை எழுத்து தேர்வு, நவம்பர்-முதன்மை  எழுத்துத் தேர்வு முடிவு, டிசம்பர் மாதம் (முதல் வாரம்)-நேர்முகத் தேர்வு, டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)கலந்தாய்வு, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இதுதவிர, குரூப் 2, குரூப் 4ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக  ஆண்டுதோறும் நடத்தப்படும். குரூப் 1 நிலையான கால அட்டவணையைப் போலவே குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கும் நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: