பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் புதுக்கோட்டை வீராங்கனைக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையிலும், இந்தியத் திருநாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தும் வகையிலும் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா நேபாளத்தில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக வீராங்கனை அனுராதா, ஏற்கனவே காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அவரது திறமைகள் உலக அரங்கில் மென்மேலும் பெருகி, பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>