தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக உட்பட பல்வேறு தரப்பினர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒன்றாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி உச்ச நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரி இடைக்கால மனு தாக்கல் செய்தார். இது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒன்றாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இதற்கிடையில், மாநில தேர்தல் ஆணையம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் விவகாரத்தில் அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தொகுதி மறுவரையறை அனைத்தும் முடிவடைந்து விட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: