75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட 19வது மாநில கணக்கெடுப்புபடி 227.23 லட்சம் கால்நடைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. செயற்கை கருவூட்டல் திட்டத்தின் கீழ் கால்நடைகள் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கால்நடை துணை மையங்கள் மூலம் இனப்பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் சார்பாக புதிய கால்நடை மையங்கள் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஏற்று தமிழகத்தில் 3000 கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கால்நடை கிளை நிலையங்கள் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிதாக 75 கிளை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: