பிரசாத் ஸ்டூடியோ பிரச்னையை சுமூகமாக பேசித்தீர்க்க வேண்டும்: இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுடன் உள்ள பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில், இசையமைப்பாளர் இளையராஜா ‘ரிக்கார்டிங் தியேட்டர்’ வைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்இதையடுத்து, இளையராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை வரும் 13ம் தேதி தள்ளிவைத்தார். இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகிகள் ரமேஷ், சாய்பிரசாத் ஆகியோர் வரும் 9ம்தேதி உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் ஆஜராகி சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ேபச்சுவார்த்தை முடியும்வரை இளையராஜாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றவோ, அவர் ரிகார்டிங் தியேட்டருக்கு செல்வதை தடுக்கவோ கூடாது என்று உத்தரவிட்டார்.

Related Stories: