தமிழ்நாடு நகர்புற முன்னணி முதலீட்டு திட்டத்துக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி 206 மில்லியன் டாலர் நிதியுதவி : 5 நகரங்களில் குடிநீர், கழிவுநீர் வசதிகள் மேம்பாடு

சென்னை: தமிழ்நாடு நகர்புற முன்னணி முதலீட்டு திட்டத்துக்கு 2வது கட்டமாக ஆசிய மேம்பாட்டு வங்கி 206 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது. தமிழகத்தின் நகர்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு வங்கிகளிடம் நிதியுதவி பெற்று தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது. நீடித்த நகர்புற உட்கட்டமைப்பு நிதியுதவி திட்டம் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவியுடனும், தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சி திட்டம் உலக வங்கி உதவியுடனும், தமிழ்நாடு நகர்புற முன்னணி முதலீட்டு திட்டம் ஆசிய மேம்பாட்டு வங்கி உதவியுடனும் செயல்படுத்தபட்டுவருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தின் உள்ள முக்கிய நகர்புறங்களில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் அமைத்தல், வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்று கட்டங்களான இந்த திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு₹8.155.81 கோடி ஆகும். இதில் ஆசிய மேம்பாட்டு வங்கி 3277.86 கோடி நிதியுதவி வழங்குகிறது.

இதன்படி முதல் கட்டத்தில் 3070 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதில் ஆசிய மேம்பாட்டு வங்கி 1099.53 கோடி நிதியுதவி அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் 951 கோடி மதிப்பீட்டில் 9 திட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2ம் கட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி ஆசிய ேமம்பாட்டு வங்கி 206 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று  முன்தினம் கையெழுத்தானது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையரும் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குனருமான ஜி. பிரகாஷ், ஆசிய மேம்பாட்டு வங்கி அதிகாரிகள், மத்திய அரசின் பொருளாதார விவகாரத்தை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிதியின்கீழ் ஆம்பூர், திருச்சி, மதுரை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு, பாதாளசாக்கடை வசதி, குடிநீர் விநியோகம் ஆகிவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: