2020 ஜனவரி முதல் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கும்: உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் 2020 ஜனவரி மாதம் முதல் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கும் என டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,147 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் தினம்தோறும் விற்பனையாகும் பணத்தை ஊழியர்கள் தங்களுடன் எடுத்துச்செல்லும் போது அவர்களை தாக்கி பணத்தை வழிபறி செய்வது, கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க கடைகளில் பணத்தை வைத்துவிட்டு சென்றனர். ஆனால், அப்போதும் கடையின் பூட்டை கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் கருவி பொருத்த வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, முதல்கட்டமாக 1,520 கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது.

தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான குழுவினர் மாவட்டம் தோறும் கடைகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினர். அதன்பின்னர், 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கான டெண்டரும் விடப்பட்டது. தற்போது, இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் 2020 ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கும் என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:18 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுவிற்பனை செய்வதை தடுக்கவும், கடைகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டெண்டர் பெற்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து சிசிடிவி கேமரா பொறுத்துவது குறித்த டெமோவும் நடைபெற்று முடிந்துள்ளது.எனவே, வரும் ஜனவரி மாதம் முதல் குறிப்பிட்ட 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தொடங்கும். டாஸ்மாக் கடை, மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மூன்றும் சிசிடிவி சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், தலைமை அலுவலகத்தில் இருந்தே நேரடியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் கடையை கண்காணிக்க முடியும். சென்னையை பொறுத்தவரை மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் பாதுகாப்பற்ற பகுதிகளாக உள்ளது. எனவே அப்பகுதிகளில் உள்ள கடைகளில் கேமரா பொறுத்தப்பட உள்ளது. இதன்மூலம் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். இவ்வாறு கூறினார். சென்னையை பொறுத்தவரை மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் பாதுகாப்பற்ற பகுதிகளாக உள்ளது. எனவே அப்பகுதிகளில் உள்ள கடைகளில் கேமரா பொறுத்தப்பட உள்ளது.

Related Stories: