போராட்டம் வாபஸ் டாக்டர்கள் அதிருப்தி

சென்னை: தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் டாக்டர்கள் கூட்டமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து போராட்டம் நடத்திய டாக்டர்கள் கூறுகையில், ‘‘எல்லா டாக்டர்களும் கிளினிக் நடத்தவோ, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியவோ இல்ைல. சில மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியாததற்கான உதவித்தொகையை கழித்தால் கூட, தமிழக அரசு வழங்கும் சம்பளம் குறைவு. நாட்டிலேயே தமிழகத்தில்தான் டாக்டர்களுக்கு வழங்கும் சம்பளம் குறைவு, அதே நேரத்தில் பணிச்சுமை அதிகமாக உள்ளது’’ என்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவரை போனில் தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.

Related Stories: