ஒப்பந்த பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் அளித்து பின் வாசல் நியமனங்களை நிறுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: ஒப்பந்த பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் அளித்து பின் வாசல் நியமனங்களை நிறுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தேர்வு விதிகள், இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு 480 நாட்கள் பணியாற்றியுள்ளதால் பணிநிரந்தரம் தருவது அரசியலமைப்புக்கு விரோதமானது என தெரிவித்துள்ளார். பின்வாசல் வழியாக நியமிப்பது தகுதியான நபர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்வேந்தர் என்பவர் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் 33 பேர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொழில் அமைப்புகள் பணிநிரந்தரம் குறித்த சட்டத்தின் அடிப்படையில், பனி பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடமுடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Related Stories: