விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை : தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 100 வரை விற்பனை செய்யப்படுவதால், குடும்ப பெண்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் இல்லாததாலும், தொடர் மழை காரணமாகவும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், வெளி சந்தையில் இருந்து வரும் வெங்காயத்தை பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தில் சிலர் ஈடுபடுவது காரணம் என தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து அதன் மூலம் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். மேலும் பதுக்கல்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்று அத்தியவாசிய பொருட்கள் செயற்கை தட்டுப்பாடு, விலை உயர்த்தப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

Related Stories: