நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

சென்னை: நடிகர் சங்கத்துக்கு தனி  அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.   நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி.கீதா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் பொருளாளர்  நடிகர் கார்த்தி ஆகியோர் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு  விசாரணைக்கு வந்தது.  நடிகர் சங்கம் தரப்பில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியாக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.

மேலும், 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் வெறும் 3 உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறானது என்று நடிகர் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் நிலுவையில் உள்ள நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓர் ஆண்டிற்கு மட்டுமே தனி  அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Stories: