மருத்துவ சேர்க்கை இடஒதுக்கீட்டில் சமூக அநீதி மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டம்: எம்பிசி நல கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் வாரியதலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை:மத்தியில் ஆளும் பாஜ அரசு, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில்  இடங்கள் ஒதுக்காமல் சமூக அநீதி செய்துள்ளது.  2017-2018ம் ஆண்டு மொத்த மருத்துவ இடங்கள் 9,966. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2,689 இடங்கள் 27 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கியிருக்கவேண்டும். வெறும் 260 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தபட்ட மக்களின் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் விளைவிக்காமல் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட மருத்துவ இடங்களை உரிய விகிதசார அடிப்படையில் நிரப்பவேண்டும் என்று மத்திய அரசை  கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால் தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு நிறுவனங்கள் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்.

Related Stories: