புழல் 22வது வார்டு தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க சாமி படம் கொண்ட பேனர்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், அண்ணா நகர், புனித அந்தோணியார் நகர், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், மதுரா மேட்டுப்பாளையம், கலெக்டர் நகர், மகாலட்சுமி நகர், கட்டிட தொழிலாளர் நகர், பத்மாவதி நகர், புத்தாகரம், சாரதி நகர், லட்சுமிபுரம், ரெட்டேரி, கல்பாளையம், விநாயகபுரம், சண்முகபுரம், பாரதிதாசன் நகர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளான 22, 23, 24, 25, 26, 32 ஆகிய வார்டு பகுதிகளில் வீடுகள், கடை, ஓட்டல்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதிகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த தொட்டிகளில் பொதுமக்கள் கொட்டி வந்தனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை பெரும்பாலான நேரங்களில் லாரிகள் அள்ளுவதற்கு வராததால் தொட்டிகள் நிறைந்து குப்பைகள் தெருக்களில் சிதறி கிடந்தது.

இதனை மாற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் வீடுகள் தோறும் துப்புரவு ஊழியர்கள் வந்து மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கி செல்கின்றனர். ஆனாலும் பெரும்பாலானோர் ஊழியர்களிடம் குப்பைகளை தராமல் மீண்டும் தெருக்களில் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில் குப்பை கொட்டுவதற்கு தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ தெய்வங்களின் படம் பொறித்த டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக புழல் காந்தி பிரதான சாலை 22வது வார்டு அலுவலகம், அங்கன்வாடி மையம், செங்குன்றம் வருவாய்த்துறை அலுவலகம், புழல் நூலகம், மாதவரம் மதுவிலக்கு பிரிவு ஆகிய அலுவலகங்களிடையே தெய்வங்களின் உருவம் பதிக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு குப்பைகள் கொட்ட கூடாது என்று வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: