ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி சதுரகிரி கோயிலில் அடிப்படை வசதிகளை 7 பேர் குழு ஆய்வு

வத்திராயிருப்பு : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதி குறித்து, கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.இதன்பேரில், வன உயிரின பாதுகாப்பு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உதயன் தலைமையில், வனப்பாதுகாவலர் தினகர்குமார், வனஉயிரின காப்பாளர் முகமது ஜபாத், இந்து சமய இணை ஆணையர் குமாரத்துரை, வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் கோவிந்தன், கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி கோயில் வரை நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், தாணிப்பாறை வழுக்கல் பாறை, மாங்கேனி ஓடை, பெரியபடிவட்டான் ஓடை, சங்கிலிப்பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடைகளில் தண்ணீர் வந்தால் பக்தர்கள் செல்லும் பாதையில் ஏற்படும் சிக்கல் குறித்து ஆய்வு செய்

தனர். மேலும், ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு எத்தனை பேர் தங்கலாம்? அன்னதானம், குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை, ஓடைகளில் பாலம் அமைப்பது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோயிலுக்கும், அடிவாரத்துக்கும் இடையில் தடுப்பணைகள் கட்டுவது ஆகியவை குறித்தும், இடி, மின்னல் மழைக்காலங்களில் பக்தர்கள் தங்குவதற்கு நிழற்குடை அமைத்தல் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தனர்.

Related Stories: