முரசொலி அலுவலக விவகாரம்: பஞ்சமி நிலம் என பாஜக பிரமுகர் தந்த புகாருக்கு திமுக தரப்பில் பதில்

சென்னை: சென்னையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என பாஜக பிரமுகர் தந்த புகாருக்கு திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. முரசொலி அலுவல நிலம் தொடர்பாக பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று. முதலில், ராமதாஸ், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் ஸ்டாலின் மறுப்பு அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும், அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை. மீண்டும் 19/10/2019ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஓர் அறிக்கை தந்தார்.

Advertising
Advertising

பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும், குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும். முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 21/10/2019 அன்று பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே முதலமைச்சர், 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பிலும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும், பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அலுவலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. திமுக சார்பில் விளக்கம் அளித்தார். முரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன; ஆனால் புகார் தந்த சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் இல்லை. மேலும் அவகாசம் கேட்டுள்ளார். ஆதாரமின்றி தரப்படும் புகார் குறித்து ஆணையம் விசாரிக்கக்கூடாது.

தலைமைச்செயலாளர் சண்முகமும் அவகாசம் கேட்டுள்ளார். மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர். முரசொலி நில விவகாரத்தில் பட்டியல் இனத்தவர் ஆணையர் தலையிட உரிமையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: