×

ஆக்சிஜன் பார்!

நன்றி குங்குமம் முத்தாரம்

காற்று மாசு பாட்டால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது டெல்லி. வீட்டுக்கு வெளியே வந்து மூச்சு விடவே சிரமப்படுகின்றனர் டெல்லிவாசிகள். இந்நிலையில் டெல் லியின் தெற்கே உள்ள சாகேட் என்ற இடத்தில் ‘ஆக்ஸி ப்யூர்’ என்ற ஆக்சிஜன் பாரை திறந்துள்ளனர். இதுதான் டெல்லியின் முதல் ஆக்சிஜன் பார்.

ஆரஞ்ச், லாவண்டர் என்று விதவிதமான நறு மணத்துடன் ஆக்சிஜனை நீங்கள் இங்கே சுவாசிக்கலாம். 15 நிமிடம்  ஆக்சிஜனை உள்ளே இழுக்க கட்டணம் ரூ.299-லிருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஆக்சிஜன் பார் இணையத்தில் செம வைரலாகிவிட்டது. இனி நல்ல காற்றும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும்போல.

Tags : Air pollution, oxygen, bar
× RELATED வில்லியனூர் அருகே மருத்துவ கழிவுகளை...