ஆன்லைன் கேம்களால் சீரழியும் சமுதாயம்: சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வாழ்க்கையை நாசப்படுத்தும் நவீன விபரீத விளையாட்டுகள்

முன்பெல்லாம், நிலவை காட்டி குழந்தைக்கு தாய் சோறூட்டுவார். இப்போதுள்ள மம்மிக்கள், டாடிக்கள் நவீன காலத்துக்கு ஏற்ப, மொபைலில், ஐபேடில் ட்விங்கிள்...ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் கார்ட்டூன்களை காட்டினால் தான் பாலூட்ட  முடிகிறது. இதில் தான் மொபைல் மோகம் பிஞ்சுகளின் மூளையில் விதைக்கப்படுகிறது. சிறுவனான பின், அவன் கையில் மொபைல் வந்தவுடன் வீடியோ கேம்களில் மூழ்க வைக்கிறது. இப்படித் தான் ஆக்டோபஸ் போல போகிமான் போன்ற  விபரீத விளையாட்டுகள் ஊடுருவின.   

இதுபோதாதென்று, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிப்பை, வேலையை ஒதுக்கி பித்து பிடித்தவர்கள் போல  அலைய வைத்தது ப்ளூவேல் கேம். கடைசியில் இந்த விபரீத விளையாட்டின் போக்கு, விளையாடுபவரை தற்கொலைக்கு  தூண்டியது. இதில் தமிழகத்தின் தலைநகரில் மட்டுமல்ல, கடைக்கோடி மாவட்டங்களிலும் கூட சில இளைஞர்களை பலி வாங்கியது இந்த எமன் விளையாட்டு.

இப்போது வலம் வந்து கொண்டிருப்பது பப்ஜி. ‘ப்ளேயர் அன்நோன் பாட்டில் கிரவுண்ட்’ என்ற ஆங்கில விரிவாக்கத்தின் சுருக்கம் தான் பப்ஜி. 20 கோடி பேர் இந்த கேமில் தினமும் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். 100 பேர்  பதிவானவுடன் இந்த ஆன்லைன் கேமில் தலா நான்கு பேராக பிரிக்கப்பட்டு விடுவர். அப்புறம் என்ன? ெஹட்போனை காதில் மாட்டிக்ெகாண்டவுடன், விமானத்தில் ஏற்றி, தனித்தீவில் உங்களை இறக்கி விட்டபின் கேம் விபரீத பாதையில்  நுழைகிறது. ஆங்காங்கு துப்பாக்கிகளை சேகரித்து 96 பேரை சுட்டுவீழ்த்தும் கடைசி நான்கு பேர் தான் வெற்றியாளர்கள்.

இதில் மூழ்கி விட்டால், படிப்பு, வேலை எல்லாம் கண்ணுக்கு தெரியாது; வீடு, பஸ், ரயில், பைக் ஓட்டுவது எல்லாம் தெரியாது; அப்புறம் என்ன விபரீதம் நடக்கும்; கேம் விளையாடுவோர் மண்டையில் ரத்தம் கொதித்து அவராகவே தற்கொலை  செய்வார். பல கல்லூரிகளில் பப்ஜிக்கு தடை உள்ளது. தடை போட வேண்டியது பெற்றோர் தான். ஆனால் பிள்ளைகள், பெற்ேறாரை தாண்டி எங்கோ போய் விட்டனர். விபரீதம் வீட்டினுள் துவங்கி, வீதிக்கு வந்து சமுதாயத்தை சீரழித்து  வருகிறது தம்மாத்தூண்டு மொபைல் ஆப் எமன். இதோ நான்கு பேர் அலசல்

Related Stories: