நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு 12 ஆயிரம் கோடி: தமிழக அரசு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: நடந்தாய் வாழி காவிரி உள்ளிட்ட பல்வேறு திட்டத்துக்கு 12 ஆயிரம் கோடி நிதி கேட்டு தமிழக அரசு அறிக்கை தாக்கல் தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் வறட்சியை போக்க மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பை ஊக்குவித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல்  ஜல்சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல மாநில அரசுகள் நிதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் நிதியை பெறும் பணிகளை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் 22 வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு  ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது,  ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி நீரை சேமிப்பது, ஏரிகளின் கரையோரத்தில் பனை மரங்கள் நடுவது உள்ளிட்ட பணிளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின் போது ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் 9900 கோடி நடந்தாய் வாழி காவிரி திட்டம், ₹2158 கோடி கல்லணை கால்வாய் இணைப்பு திட்டத்துக்கான அறிக்கை தயார் செய்து ஜல்சக்தி துறை  அமைச்சகத்திடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.அதே போன்று தமிழக அரசு சார்பில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை தற்போது முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு கேட்டு  ஜல்சக்தி துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை  அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ஜல்சக்தி அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன், அதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: