நாளை கார்த்திகை விரதம் தொடக்கம்: துளசி மணிமாலை, இருமுடி பொருட்கள் விற்பனை அமோகம்

சேலம்: கார்த்திகை விரதம் நாளை தொடங்குவதால் சேலம் கடைவீதியில் துளசி மணிமாலை, டாலர், காவி வேஷ்டி, இருமுடி பொருட்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். நடப்பாண்டு கார்த்திகை விரதம் நாளை (17ம் தேதி) தொடங்குகிறது. நாளை முதல் தை முதல் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவார்கள். இதையொட்டி சேலம் கடைவீதியில் காவி வேஷ்டி, துளசிமணிமாலை, ஸ்படிகமணி, ஐயப்பன் டாலர், இருமுடி பை, சந்தனம், ஜவ்வாது, விபூதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பேரீட்சைபழம், அச்சு வெல்லம், ஊதுபத்தி, நெய் உள்ளிட்டவைகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது.

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சாமந்தி, சம்பங்கி, குண்டுமல்லி, ஊசிமல்லி, அரளி, துளசி உள்ளிட்ட பூக்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கார்த்திகை விரதம் தொடங்கும் பக்தர்கள், கடைகளில் ஆர்வத்துடன் இருமுடிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். கார்த்திகை விரதம் தொடங்குவதையொட்டி நாளை சேலம் சுகவனேஸ்வரர் , ராஜகணபதி, சித்ேதஸ்வரா காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி, சாஸ்தா நகர் ஐயப்பன், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ஐயப்பன், ஊத்துமலை முருகன் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: