கூனிச்சம்பட்டு பகுதியில் பழைய தண்ணீர் தொட்டி இடிப்பு: ஆணையர் பார்வையிட்டார்

திருக்கனூர்: திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், அங்குள்ள கோயிலுக்குச் சொந்தமான தாமரைக் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்தார். அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள பழைய நீர்த்தொட்டியை அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர். உடனே கலெக்டர் அருண் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமாரிடம் பழைய தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்றும்படி கூறினார்

அதன்படி ஒப்பந்ததார் மூலமாக பழைய தண்ணீர் தொட்டியை இடிக்கும் பணி நடந்தது. இதனை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.  மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சரி செய்யுமாறும் அதிகாரியிடம் கூறினார். இதில் கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திமுக விவசாய அணி நடராஜன், முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க தலைவர் வெங்கடேசன், பீட் பில்டிங் ஒப்பந்ததாரர் கலியபெருமாள், ஜெயராமன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Related Stories: