எஸ்-400 ஏவுகணை தடுப்புக் கவண் இந்தியாவிடம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படும்: ரஷ்யா தகவல்

பிரேசிலியா: எஸ்-400 ஏவுகணை தடுப்புக் கவண் இந்தியாவிடம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளையும், அது சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், கடந்தாண்டு அக்டோபரில் கையெழுத்தானது. இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புக்கு போடப்பட்ட இந்த ஒப்பந்ததில் முன்பணம் மற்றும் பணம் செலுத்தும் நடைமுறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். மாநாடு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, புதினிடம் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள எஸ்-400 ஏவுகணை தடுப்புக்கவண் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள எஸ்-400 ரக ஏவுகணை தடுப்புக்கவணை பொருத்தவரை அனைத்து நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது. தடுப்பு கவணை எங்களிடம் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என இந்திய பிரதமர் மோடி என்னிடம் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை.

ஆகையால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இந்தியாவிடம் எஸ்-400 ஒப்படைக்கப்படும் என கூறினார். ரஷியா மற்றும் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவண் ஆயுதத்தின் அனைத்து தொகுப்புகளும் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: