×

சூரிய ஒளி முன்னிலையில் காபனீரொட்சைட்டினை திரவ எரிபொருளாக மாற்றக்கூடிய செயற்கை இலை உருவாக்கம்

பூமியின் வளி மண்டலத்தில் தற்போது அதிகளவான காபனீரொட்சைட் வாயு காணப்படுகின்றது. இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. எனவே மித மிஞ்சிய காபனீரொட்சைட்டினை எரிபொருளாக மாற்றுவது தொடர்பில் விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ந்து வந்தனர். இதன் விளைவாக தற்போது சூரிய ஒளி முன்னிலையில் காபனீரொட்சைட்டினை திரவ எரிபொருளாக மாற்றக்கூடிய செயற்கை இலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Yimin A. Wu எனும் ஆராய்ச்சியாளரின் தலைமையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹொங்ஹொங்கின் சிட்டி பல்கலைக்கழகம் என்பவற்றின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இந்த இலையினை உருவாக்கியுள்ளனர்.

இயற்கையில் பச்சை இலைத்தாவரங்கள் காபனீரொட்சைட் மற்றும் நீரின் உதவியுடன் குளுக்கோசினை உற்பத்தி செய்கின்றன. இது ஒளித்தொகுப்பு என அழைக்கப்படுகின்றது. இதன்போது பச்சை இலைகளில் காணப்படும் குளோரொபில் எனப்படும் பதார்த்தம் சூரிய ஒளியை உறுஞ்சுகின்றது. பின்னர் குளுக்கோசு தாவரங்களுக்கான எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. இதே பொறிமுறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கை இலையானது மெதனோல் மற்றும் ஒட்சிசனை உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sunlight, carbon dioxide, liquid fuel, artificial leaf, formation
× RELATED இந்தியாவின் எரிபொருள் தேவை...