கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் 2 ஆயிரம் கிலோவில் கேக் தயாரிக்க முடிவு

ராமநாதபுரம்: உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, திருப்பலி நடைபெறும். கேக் வெட்டி கிறிஸ்தவ மக்கள் பண்டிகையை கொண்டாடுவர். இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெட்டுவதற்காக ராமநாதபுரம் சாலை தெரு பகுதியில் தனியார் பேக்கரி நிறுவனம் மூலம் சுமார் 2000 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளது. உலர்ந்த கருப்பு திராட்சை, வெள்ளை திராட்சை, பேரீச்சம்பழம், ஜிஞ்சர் ஜூஸ், செரி முந்திரி உள்ளிட்ட மூல பொருட்கள் 20 நாட்கள் ஊறவைத்து பிளம்கேக் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மூலப்பொருட்கள் கலவை இன்று நடந்தது. கேக் தயாரிக்கும் பணியில் 100 சமையல் கலைஞர்கள் ஈடுபட உள்ளனர்.

Related Stories: