×

விண்வெளியில் பிஸ்கட்!

நன்றி குங்குமம் முத்தாரம்

விண்வெளிக்கு  வீரர்கள், வீராங்கனைகளை அனுப்புவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது முதல் முறையாக ஒரு அடுப்பை அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் பிஸ்கட் தயாரிப் பதற்காக. கடந்த வாரம் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் இருந்து ஒரு விண்கலம் சர்வதேச விணகலத்துக்கு சீறிப் பறந்தது. அது ஒரு அடுப்பையும், பிஸ்கட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் ஏற்றிச்சென்றுள்ளது.

விண்வெளி வீரர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் இந்த அடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக அதிக  வெப்பம், புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பிஸ்கட்  தயாரிக்கும்போது அதன் வடிவம் எப்படியிருக்கும் என்பதை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராயப்போகின்றனர்.முதல் முறையாக  விண்வெளியில் பிஸ்கட் தயாரிக்கும் நிகழ்வு இதுதான்.

Tags : space , We have heard about sending heroes into space. Now they have sent a stove for the first time.
× RELATED செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால்...