காலி பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில் பொதுப்பணித்துறையில் அடுத்த ஆண்டு 150 பேர் ஓய்வு பெறுவதாக அறிக்கை: முதன்மை தலைமை பொறியாளர் அதிர்ச்சி

சென்னை: பொதுப்பணித்துறையில் 2020ல் ஓய்வு பெறவுள்ள பொறியாளர்கள் பட்டியலை முதன்மை தலைமை பொறியாளர் மண்டல தலைமை பொறியாளரிடம் அறிக்கை கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு  கடிதம் ஒன்றை எழுதி அனுப்பபியுள்ளார். அதில், 2020ல் ஓய்வு பெறவுள்ள உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், ஆட்சி அலுவலர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் விவரங்களை  அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். மேலும் தற்போது காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் ஒவ்வொரு மண்டலம் சார்பில் முதன்மை தலைமை  பொறியாளருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், திருச்சி மண்டலத்தில் இளநிலை, உதவி பொறியாளர் 13 பேர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் என 8 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதே போன்று சென்னை, மதுரை, கோவை மண்டலங்களிலும்  150 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்களால் பொதுப்பணித்துறை தவித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு 150 பேர் வரை ஓய்வு பெறவுள்ளனர். இது, பொதுப்பணித்துறை  வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை காரணம் காட்டி உதவி ெசயற்பொறியாளர், செயற்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பபடவில்லை. இந்த விவகாரத்தில் துறை செயலாளர் மணிவாசன் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து  இருக்க வேண்டும்.

ஆனால், அவர் இரண்டு சங்கங்களை ஒருங்கிணைத்து பதவி உயர்வு பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்ததால் அந்த பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால், தற்போது பணியில் உள்ள பொறியாளர்கள் கூடுதலாக கவனித்து  வருகின்றனர். இதனால், அவர்களால் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கோட்டங்களில் நடக்கும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதிலும், புதிய பணிகளை செயல்பாட்டு கொண்டு வர முடியாமலும் தடுமாறி வருகின்றனர்.எனவே, தற்போதைக்கு உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: