சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை : சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக கூறப்படுபவர்களின் பட்டியலை வெளியிட கோரி யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கு நீதிபதிகள்,

*சிலை பாதுகாப்பு மற்றும் பொன்.மாணிக்கவேலுக்கான வசதிகள் தொடர்பான தீர்ப்புகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு.

*தமிழகத்தின் பொக்கிஷங்களான சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் உயர்நீதிமன்றம் செயல்படுகிறது.

*அரசு அதிகாரிகள், அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ  செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை.

என்று கூறி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவ.12க்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: