×

ரியல் எஸ்டேட் துறையில் 6% திட்டங்களை முடிக்கவே 25,000 கோடி நிதி உதவும்

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சரி செய்ய, நாடு முழுவதும் நிலுவையில் உள்ள புதிய வீடுகள் கட்டுவதற்கான 1,508 திட்டங்களுக்கு நிதி வழங்க 25,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்திட்டங்களில் 4.58 லட்சம் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன.இந்த நிதியுதவிதொடர்பான சந்தேக விளக்கங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வீடு வாங்குவோர் தங்கள் வங்கிகளில் இருந்து கூடுதல் கடன் பெற அணுகலாம். அதேநேரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டில் உதவி கோர முடியாது. நிதி பற்றாக்குறையால் கிடப்பில் உள்ள கட்டுமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு மட்டுமே இந்த நிதி உதவி கிடைக்கும்.

நடுத்தர வருவாய் பிரிவில் உள்ள மலிவு விலை வீடு பிரிவில், 200 சதுர மீட்டருக்குள் கார்பெட் ஏரியா உள்ள திட்டங்களுக்கு மும்பை பெருநகர மண்டலத்தில் ₹2 கோடி வரையிலும், என்சிஆர், சென்னை, கொல்கத்தா, புனே, ஐதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் பகுதியில் 1.5 கோடி வரையிலும், நாட்டின் பிற பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் வரையிலும் உள்ள வீடுகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். இந்த நிதியுதவி, மொத்தம் தேங்கிக்கிடக்கும் கட்டுமான திட்டங்களில் 6 சதவீதத்தை முடிக்க மட்டுமே உதவும் என கூறப்படுகிறது.

Tags : real estate, help ,projects
× RELATED உத்தரகாண்டில் நமாமி கங்கை...