ஜெயலலிதா நினைவிடம் டிசம்பர் 5ம் தேதி திறப்பு

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை டிச.5ம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ெதாடர்ந்து, மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணியில் 10 பகுதி வேலையில் 8 பகுதி வேலை முடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் நடைபாதை, வாகன நிறுத்தம், அருங்காட்சியம், அறிவு சார் மையம், நூலகம் அமைக்கப்படுகிறது.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்  பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது.  

இப்பணிக்கு ஐஐடி நிபுணர்கள் ஸ்டெக்சுரல் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளனர். அந்த கட்டுமான பணிகள் மட்டும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் தலைமையில் ஐஐடி நிபுணர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது துபாயில் இருந்து வரவழைக்கப்பட்ட பீனிக்ஸ் பறவையின் இறக்கைக்கான ஹேண்டில் லீவரை நினைவிடத்தில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பீனிக்ஸ் பறவை கட்டிடத்துக்கு வெளியில் இரண்டு பக்கமும் சிங்கம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தின் முகப்பில் ஜெயலலிதா மார்பளவு கொண்ட சிலை அமைக்கப்படுகிறது. தற்போது நினைவிடத்தில் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை சமீபத்தில் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் டிசம்பர் 5ம் ேததிக்குள் நினைவிடத்தை திறக்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்து ராஜசேகர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: