சோதனை முறையில் இயக்கப்பட்ட மின்சார பஸ்சில் 10,000 பேர் பயணம்

சென்னை : சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கிற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கிற வகையிலும் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை தமிழகத்தில் இயக்கிட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசின் ‘ஃபேம் இந்தியா-2’ திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதுமான 64 நகரங்களுக்கு 5,595 மின்சார பேருந்துகள் இயக்கிட இசைவு அளிக்கப்பட்டுள்ளது.   இதில் தமிழகத்தில் மட்டும் முக்கிய நகரங்களுக்கு 525 மின்சாரப் பஸ் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் செயல்பாட்டில் வருவதற்கு முன்னோட்டமாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு புதிய மின்சார பேருந்து கடந்த ஆகஸ்ட் 26ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த மின்சார பஸ் பரிசோதனை அடிப்படையில், நாள்தோறும் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து ‘ஏ1’ வழித்தடமான மயிலாப்பூர், அடையார் வழியாக திருவான்மியூர் வரை, காலை 2 நடையும், மாலை 2 நடையும் இயக்கப்படுகிறது. தற்போது வரை இப்பேருந்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: